/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டூ - வீலரில் குட்கா கடத்தியவர் கைது
/
டூ - வீலரில் குட்கா கடத்தியவர் கைது
ADDED : மார் 29, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஸ்டீபன்சன் ரோடு, செங்கை சிவம் மேம்பாலம் பகுதியில், நேற்று முன்தினம் மதியம் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தபோது, 1,000 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், சென்னையைச் சேர்ந்த கண்ணதாசன், 43, என்பதும், ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவரை ஓட்டேரி போலீசார் கைது செய்தனர்.

