/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரைகுறை சாலை பணி அயனாவரத்தில் அவதி
/
அரைகுறை சாலை பணி அயனாவரத்தில் அவதி
ADDED : ஜூன் 11, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், அண்ணா நகர் மண்டம், 98வது வார்டில், அயனாவரம், பார்த்தசாரதி தெரு உள்ளது. இந்த தெருவில், 50க்குமேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இத்தெருவில் ஒரு மாத்திற்கு முன், புதிய சிமென்ட் சாலை அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டது.
தற்போது, ஜல்லி கற்கள் கொட்டபட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நடந்து செல்ல கூட முடியாத நிலையில் தெரு சாலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர், தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்கணித்து, விரைவாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.