/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு
/
சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு
சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு
சாலையில் கிடந்த பை மீட்பு உரிமையாளரிடம் ஒப்படைப்பு
ADDED : செப் 12, 2024 12:15 AM

அடையாறு, சைதாப்பேட்டை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய், 25; அடையாறு மண்டலம், 179வது வார்டு துாய்மை பணியாளர்.
நேற்று காலை, திருவான்மியூர், கலாஷேத்ரா காலனியில் குப்பை சேகரித்துக் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு பை கிடந்தது.
அதில், இரண்டு மொபைல் போன்கள், ஒரு ஏ.டி.எம்., கார்டு மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. அந்த மொபைல் போனில், கடைசியாக அழைக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு, பை குறித்து தெரிவித்தார்.
சில நிமிடங்களில், அடையாறு பத்மநாபன் நகரைச் சேர்ந்த ரமணி, 78, என்பவர், சம்பவ இடத்துக்குச் சென்றார்.
அவரது உடைமைகள் தான் என தெரிந்த பின், மேல் அதிகாரிகளின் முன்னிலையில் விஜய், அதன் உரிமையாளர் ரமணியிடம் ஒப்படைத்தார்.