ADDED : ஆக 02, 2024 12:11 AM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
மாத சிவராத்திரியை முன்னிட்டு, கபாலீஸ்வரர் சுவாமி அபிஷேகம், காலை 8:30 மணி. ஆடி வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம், காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
கலியாணபசுபதீஸ்வரர் கோவில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷே பூஜை, அபிஷேகம், காலை 6:00 மணி. மண்டல பூஜை, மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
கம்ப ராமாயண உபன்யாசம்
ஸ்ரீ ஏக்நாத் கிருபா சத்சங்கம் சார்பில் நடராஜன் ஷியாம்சுந்தரின் கம்பன் கண்ட ராமன் எனும் தலைப்பில் ராமாயண உபன்யாசம், மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணிவரை.
ஆடி விழா
அதிகாலை 4:06க்கு கொடியேற்றம், மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதல், சந்திர பிரபை வாகனம், இடம்: பாதாள செங்காளம்மன் கோவில், 35, மாணிக்க செட்டி தெரு, சூளை - 112.
ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி ஸத் சங்கம் சார்பில் வாய்ப்பாட்டு, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
இசை விழா
தெய்வீக இயல் இசை மன்றத்தின் 33ம் ஆண்டு இயல் இசை விழா, மாலை 6:30 மணி. இடம்: பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம், வண்டிக்காரன் சாலை, கிண்டி - 32.
பொது
நாணயக் கண்காட்சி
சென்னை நாணயவியல் சங்கம் சார்பில் நாணய, ஸ்டாம்ப், வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் விற்பனைக் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணிவரை. இடம்: ஏ.கே.ஆர்.மஹால், காளியம்மன் கோவில் தெரு, விருகம்பாக்கம்.
இலவச யோகா பயிற்சி
சத்யானந்தா யோக மையம் சார்பில் இலவச யோகா வகுப்பு - காலை 5:30 முதல் 7:00 மணி வரை. இடங்கள்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி மற்றும் பி2, லட்சுமி நகர், பிரதான சாலை, நங்கநல்லுார்.