ADDED : ஆக 24, 2024 12:06 AM
ஆன்மிகம்
உபன்யாசம்
தாம்பரம் ஆஸ்திக சபா சார்பாக, ஸ்ரீ கிருஷ்ணனின் பிருந்தாவனம் மற்றும் கோகுலம் லீலைகள், நிகழ்த்துபவர்: ஸ்ரீநிவாஸ வரதன்,- மாலை 6:45 முதல் இரவு 8:30 மணி வரை, அனுமதி இலவசம், இடம்: ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம்.
ராமாயண சொற்பொழிவு
நிகழ்த்துபவர்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன், மாலை 6:30 மணி. இடம்: சீனிவாசன் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
ஆழ்வார்கள் தமிழ் அரங்கம், தலைமை கலியன் சம்பத், சிறப்புரை: புருஷோத்தமன், ரகுவீரபட்டாச்சாரியார். காலை 9:30 மணி முதல். இடம்: பிரில்லியன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கண்ணன் நகர், மடிப்பாக்கம்.
மனோன்மணீஸ்வரர் கோவில்
திருவாசகம் முற்றோதல்- - காலை 8:00 மணி முதல், மகேஸ்வர பூஜை - பகல் 1:00 மணி.
இடம்: மனோன்மணீஸ்வரர் கோவில், எஸ்.எஸ். மஹால், பள்ளிக்கரணை.
பொது
20 நுால்கள் வெளியீட்டு விழா
பி.எம்.கண்ணன் எழுதிய 20 நுால்களின் வெளியிட்டு விழா. நுால்களின் முதல் பிரதியை, மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் பெறுகிறார் - மாலை 6:30 மணி. இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்.
கிருஷ்ண தரிசனம் கண்காட்சி
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
'பீட்டா' சார்பில் சைவ உணவுகளுக்கு மக்களை மாற வலியுறுத்தி, பொய்கால்களுடன், ஆடு, மாடு, கோழி மூகமூடி அணிந்து விழிப்புணர்வு பிரசாரம்-மாலை 4:00 மணி. இடம்: எலியாட்ஸ் கடற்கரை, போலீஸ் பூத்.

