ADDED : ஜூலை 25, 2024 12:23 AM
ஆன்மிகம்
ஸ்ரீ பாலசுப்ரமணிய சங்கத்தின் பீஷ்ம துதி, மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
நாம சங்கீர்த்தன உற்சவம்
பாராயணம், பாதுகா பூஜை, தேவாரம், திருப்புகழ், அபங்க சங்கீர்த்தனம், மதியம் 3:00 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: கணேஷ் மண்டலி, வரசித்தி விநாயகர் கோவில், நங்கநல்லுார்.
ஸ்ரீ ஆஸ்திக சேவா சமிதியின் 17ம் ஆண்டு மஹோத்சவம் மற்றும் உலக நன்மைக்காக, காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, ஸ்ரீ அதிருத் ஹோமம், ஸ்ரீமத் பாகவத உபன்யாசம், இரவு 7:00 மணி. இடம்: அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், மேற்கு மாம்பலம்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம், காலை 6:15 மணி. நித்யானுசந்தானம், மாலை 6:00 மணி. திருநடைகாப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
குருவாயூரப்பன் கோவில்
கும்பாபிஷேகம் முன்னிட்டு மண்டலாபிஷேகம், காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
கும்பாபிஷேகம் முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம் - காலை 6:00 மணி. மண்டல பூஜைகள், பிரசாதம் வினியோகம் மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
நாம சங்கீர்த்தன உற்சவம்
சத்குரு பாதுகா பூஜை, நாம சங்கீர்த்தனங்கள், சீதா கல்யாணம், தேவாரம், திருப்புகழ், அபங்க சங்கீர்த்தனம், காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், நங்கநல்லுார்.
தெய்வ சேக்கிழார் விழா
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் - ஸ்ரீ ராமச்சந்திரா ஆராய்ச்சி பல்கலை இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் சேக்கிழார் வழிபாடு, காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர், 24/13 ஏ, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு, திருவான்மியூர் - 41.
வள்ளலார் வழிபாடு
தலைமை ஆதம்பாக்கம் வி.பவானி சங்கர், அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு - மாலை 5:00 மணி முதல். இடம்: நித்ய தீப தர்ம சாலை, தீபம் அறக்கட்டளை, புத்தேரி கரை தெரு, வேளச்சேரி.
பொது
கண்காட்சி
பூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.