ADDED : செப் 07, 2024 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, செப். 7-
சட்டக் கல்லுாரி ஒன்றில் படிக்கும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த, 19 வயது மாணவி, நேற்று முன்தினம் மாலை, அரசு சிற்றுந்தில் பயணம் செய்தார்.
மதுரவாயல் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, அதே பேருந்தில் பயணித்த வாலிபர் ஒருவர், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி, சில்மிஷத்தில் ஈடுபட்ட வளசரவாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ், 21, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தோஷ், கட்டட தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது.