தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி

மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி

மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி


ADDED : ஜூன் 12, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலை பயிற்சி மையத்தின் சார்பில், வரும் 19ல் மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில், ‘சிப்பெட்’ நிறுவனத்திற்கு எதிரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வரும் 17ல், சாட் வகைகள் தயாரிப்பு, 18ல் காளாண் வளர்ப்பு, 19ல் மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

சாட் வகை தயாரிப்பில், பாவ் பாஜி, நாட்சோஸ், பனீர் பிங்கர் ரோல், கட்சோரிஸ், பானி பூரி, சேவ் பூரி, சீஸ் ஸ்டிக்ஸ், ஆனியன் சமோசா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

காளாண் வளர்ப்பில், குடில் அமைப்பு, வித்து தயாரிப்பு, தொற்று நீக்கம் உள்ளிட்ட பயிற்சிகளும், மூலிகை சோப் தயாரிப்பில் பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம், நலங்கு மாவு, குப்பைமேனி, ரோஸ், சந்தன ஆயில், ஆவாரம்பூ, அதிமதுரம் உள்ளிட்ட சோப்புகளை தயாரிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். விபரங்களுக்கு, 044 – 2953 0048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us