/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் பலி
/
மின்சாரம் தாக்கி ஹோட்டல் ஊழியர் பலி
ADDED : ஜூன் 11, 2024 12:29 AM
துரைப்பாக்கம், திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் தன்குமார், 24. இவர், துரைப்பாக்கத்தில் உள்ள பாதின்டா எக்ஸ்பிரஸ் ஹோட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று காலை, தன்குமார், சக ஊழியர்களுடன் துாய்மை பணி செய்து கொண்டிருந்தார்.
அங்குள்ள, பிரிஜை சுத்தம் செய்யும்போது, மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற அமேந்தர், 22, சுகுமார், 33, ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது.
சக ஊழியர்கள் மூன்று பேரையும் மீட்டு, பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தன்குமார் இறந்ததாக மருத்துவர்கள் கூறினர். இரண்டு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.முதல்கட்ட விசாரணையில் மின் கசிவால் மின்சாரம் தாக்கியதாக தெரியவந்துள்ளது.

