ADDED : மே 07, 2024 12:19 AM
திருவேற்காடு, திருவேற்காடு, பெருமாள் கோவில் தெரு, கூவம் ஆற்றை ஒட்டி 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, ஆற்றை ஆக்கிரமித்துள்ள வீடுகளை அகற்றுவதற்கு, நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினர், கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வி.சி.க., தலைவர் திருமாவளவன், அப்பகுதியை நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகள் அகற்றுவது குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர், ''பல கார்ப்பரேட் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், ஆற்றின் குறுக்கே கட்டடங்கள் கட்டியுள்ளன. அவற்றையெல்லாம் சீண்டி பார்க்காத ஆட்சி நிர்வாகம், ஏழை, எளிய மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. இதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம்,'' என, தெரிவித்தார்.