/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகுதிநேர வேலை ஆசை ரூ.93,800 இழந்த இல்லத்தரசி
/
பகுதிநேர வேலை ஆசை ரூ.93,800 இழந்த இல்லத்தரசி
ADDED : ஆக 23, 2024 12:21 AM
எம்.ஜி.ஆர்.நகர்,சென்னை, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சரண்யா, 34; இல்லத்தரசி. இவரது, 'இன்ஸ்டாகிராம்' வலை பக்கத்தில் கடந்த 20ம் தேதி தனியார் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, 'வாட்ஸாப்'பில் வந்த 'லிங்க்' அனுப்பி டாஸ்க் முடிக்கும்படியும்; அப்படியானால் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும் எனக்கூறி உள்ளனர்.
ஒவ்வொரு டாஸ்கிற்கும் பணம் கட்ட வேண்டும்.
அந்த வகையில் ஏழு டாஸ்க் நிறைவு செய்துள்ளார். இதற்காக 93,800 ரூபாயும் செலுத்தினார். ஆனால், வேலையும் கிடைக்கவில்லை; கொடுத்த பணமும் 'ஆட்டை' போடப்பட்டது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரண்யா, எம்.ஜி.ஆர்., நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, ஜாபர்கான்பேட்டை, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 42. இவரது மொபைல் போன் எண்ணிற்கு, கடந்த 14ம் தேதி தொடர்பு கொண்ட நபர், 'பஜாஜ் லோன்' நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், குறைந்த வட்டியில் 'பர்சனல் லோன்' வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய செந்தில்குமார், மர்மநபர் கூறியபடி முன்பணமாக தவணை முறையில், 45,600 ரூபாய் செலுத்திஉள்ளார்.
பின், அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது எந்த தகவலும் இல்லை. இது குறித்து நேற்று முன்தினம் இரவு எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

