/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! மின்மாற்றி அருகே 'இ - டாய்லெட்'
/
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! மின்மாற்றி அருகே 'இ - டாய்லெட்'
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! மின்மாற்றி அருகே 'இ - டாய்லெட்'
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! மின்மாற்றி அருகே 'இ - டாய்லெட்'
ADDED : ஆக 26, 2024 02:15 AM

கீழ்ப்பாக்கம்:மின்மாற்றி அருகே 'இ - டாய்லெட்' உள்ளதால், பகுதிவாசிகள் பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டில், கீழ்ப்பாக்கம் தோட்டச் சாலை உள்ளது.
இந்த சாலையைச் சுற்றியுள்ள கல்லறை சாலை, கிளப் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சென்னை மாநகராட்சியின் இலவச கழிப்பறைகள் மற்றும் 'இ-டாய்லெட்கள் உள்ளன.
இவற்றை முறையாக பராமரிக்காததால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தோட்டச் சாலை முழுதும் ஏராளமானோர், சாலையோரத்தில் வியாபாரம் செய்து கொண்டு, சாலையோரத்திலேயே வசித்து வருகின்றனர். இவர்கள், இப்பகுதியிலுள்ள மாநகராட்சியின் இலவச கழிப்பறைகளை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது, கடந்த சில ஆண்டுகளாக கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி, படுமோசமாக உள்ளன. குறிப்பாக, தோட்டச் சாலையிலுள்ள, 'இ - டாய்லெட்' மின்மாற்றியின் பின்புறத்தில் அமைந்துள்ளதால், இதன் அருகில் செல்லவே அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
உயரழுத்த மின்மாற்றியின் அருகில் கழிப்பறை அமைத்தால், யாரால் பயன்படுத்த முடியும். இதைக் கூட மாநகராட்சி அதிகாரிகள் சிந்திக்காமல், அலட்சியமாக இருக்கின்றனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார் அளித்தும், 'தினமலர்' நாளிதழில் பலமுறை சுட்டிக்காட்டியும், அதிகாரிகள் துாக்கத்திலேயே உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

