ADDED : ஆக 21, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, முல்லை நகரைச் சேர்ந்தவர் பிரமிளா, 31. இவரது கணவர் மகேஷ், 37; பெயின்டர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மகேஷ், வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று அடமானம் வைத்தும், விற்றும் குடித்து வந்து உள்ளார்.
இதனால் தம்பதி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மகேஷ் கத்தியால் பிரமிளாவின் தலையில் வெட்டி தப்பினார்.
இதில் படுகாயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார், மகேைஷ நேற்று கைது செய்தனர்.

