/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாம்பன் சுவாமிகள் கோவில் பூஜை, திருவிழா அறநிலையத்துறை நடத்த ஐகோர்ட் அனுமதி
/
பாம்பன் சுவாமிகள் கோவில் பூஜை, திருவிழா அறநிலையத்துறை நடத்த ஐகோர்ட் அனுமதி
பாம்பன் சுவாமிகள் கோவில் பூஜை, திருவிழா அறநிலையத்துறை நடத்த ஐகோர்ட் அனுமதி
பாம்பன் சுவாமிகள் கோவில் பூஜை, திருவிழா அறநிலையத்துறை நடத்த ஐகோர்ட் அனுமதி
ADDED : மார் 29, 2024 12:32 AM
சென்னை, ராமேஸ்வரத்தில் பிறந்த, பாம்பன் சுவாமி என்ற பாம்பன் குமரகுரு தாசர், முருக கடவுள் பற்றி, ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.
சென்னை, ஜார்ஜ்டவுன் பகுதியில் வசித்து வந்த பாம்பன் சுவாமி, 1929ல் மரணம் அடைந்தார். அவரது உடல், திருவான்மியூரில், அடக்கம் செய்யப்பட்டது. இந்த சமாதியில், பூஜை காரியங்கள் நடந்து வருகின்றன.
முன்னேற்றம்
அறநிலையத் துறை வசம் உள்ள இந்த சமாதியை தங்களிடம் ஒப்படைக்க கோரி, மகா தேஜோ மண்டல சபா என்ற அமைப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அறநிலையத்துறை கமிஷனர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.,சுந்தரேசன், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், சபாக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஹிந்து அறநிலையத்துறை, 1984 முதல் கோவில், சமாதியை பராமரித்து வருகிறது. வளர்ச்சி சார்ந்த பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தினசரி பணிகளுக்கு, அறநிலையத்துறை ஊழியர்கள் 17 பேர் பணிபுரிகின்றனர். கோவில் நிரந்தர வைப்பு கணக்கில், 89 லட்சமும், அன்னதான நிரந்தர வைப்பு கணக்கில் 1.16 கோடி ரூபாயும் உள்ளது.
மார்கழி மாதத்தில் நடக்கும் மயூர வாகன பூஜை பிரதானம். பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி மற்றும் அங்குள்ள சிவன், விநாயகர், முருகன் கோவில்களில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடுகின்றனர். அறநிலையத்துறை சார்பில் அங்கு பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
மேல்முறையீடு
மஹா தேஜோ மண்டல சபா அல்லது மகா தேஜோ மண்டலம் அல்லது வேறு பெயர்களில் பதிவு செய்த சங்கங்கள் என பலர், கோவில் நிர்வாகம் தொடர்பாக உரிமை கோருகின்றனர். எனவே, பாம்பன் சுவாமிகள் உயிலின் படி, மயூர வாகன சேவா, இதர பூஜைகளை நடத்த உரிமை கோரும் சரியான, பதிவு செய்த உண்மையான நபர்களை, அறநிலையத்துறை கண்டறிய வேண்டும்.
இதுதொடர்பாக அனைவருக்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்த நடைமுறையை உடனே செய்ய வேண்டும்.
இந்த நடைமுறை முடியும் வரை, கோவில் சார்ந்த பூஜை, திருவிழாக்களை அறநிலையத்துறை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
கோவில் நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள், முறைகேடுகள் குறித்தும் விசாரணை செய்யலாம். மேல்முறையீடு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

