/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் கான்வாயில் குறுக்கே புகுந்த ஆட்டோ பறிமுதல்
/
முதல்வர் கான்வாயில் குறுக்கே புகுந்த ஆட்டோ பறிமுதல்
முதல்வர் கான்வாயில் குறுக்கே புகுந்த ஆட்டோ பறிமுதல்
முதல்வர் கான்வாயில் குறுக்கே புகுந்த ஆட்டோ பறிமுதல்
ADDED : மே 24, 2024 12:14 AM
தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, சித்ரஞ்சன் சாலை முகாம் அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை, முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொள்ள காரில் புறப்பட்டார்.
தேனாம்பேட்டை, கிரவுன் பிளாசா ஹோட்டல் அருகே வந்த போது, முதல்வர் 'கான்வாய்' வாகனம் குறுக்கே, ஆட்டோ ஒன்று திடீரென நுழைந்தது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சப் - -இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார், ஆட்டோவை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த நான்கு பேரிடம் விசாரித்ததில், அவர்கள் அரக்கோணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது.
அவர்கள் ஜீவரத்தினம், 27, கோவிந்தராஜ், 27, கார்த்திகேயன், 30, மணிகண்டன், 26, என்பதும், அனைவரும் போதையில் இருந்ததும் தெரிந்தது.
எழும்பூர் பகுதியில் உள்ள ஸ்டாண்டில், இவர்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். விசாரணைக்குப் பின், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக, ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் எச்சரித்து அனுப்பினர்.