/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் மாணவி கேள்விக்கு வாகன ஓட்டிகள் திணறல்
/
இ.சி.ஆரில் மாணவி கேள்விக்கு வாகன ஓட்டிகள் திணறல்
ADDED : ஆக 13, 2024 01:04 AM

சென்னை, விபத்தில்லா சென்னையை உருவாக்கும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சென்னை போக்குவரத்து போலீசார், 'இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்' போட்டி அறிவித்தது. இதற்கு, பரிசும் அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்சாலை விழிப்புணர்வு தொடர்பான வீடியோக்களை பதிவு செய்து, போக்குவரத்து போலீசாரின் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர்.
இதில் ஒருவர், செம்மஞ்சேரி மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவி கே.சத்யாஸ்ரீ. இவர், பள்ளி சீருடையுடன் இ.சி.ஆரில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
போலீசார் ஏற்படுத்திய, 'ஜீரோ இஸ் குட்' எதற்காக வெளியிடப்பட்டது என மாணவி கேட்டார். பல வாகன ஓட்டிகள் தெரியாது என்றனர்.
தொடர்ந்து, வாகனம்ஓட்டும்போது என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். சாலை விதிமுறைகள் என்ன, விதிமீறல் என்ன, அதற்கு என்ன தண்டனை போன்ற கேள்விகள் கேட்டார். பல வாகன ஓட்டிகள், இதற்கு பதில் கூறினர்.
இதை, போக்குவரத்து போலீசாரின் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். இதற்கு, பலர் பாராட்டியதுடன், மாணவிக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.
இது குறித்து, மாணவி கே.சத்தியாஸ்ரீ கூறியதாவது:
இ.சி.ஆரில், அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து விதிமுறை தெரிந்து தான் வாகனங்கள் ஓட்ட வேண்டும்.
உரிமம் இல்லாமல், சிறுவர், சிறுமியர் வாகனம் ஓட்டுவதை பார்க்கிறேன். இதை பெற்றோர் தடுக்க வேண்டும்.
பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும்என்ற நோக்கத்தில், வாகன ஓட்டிகளிடம் பேசினேன். இதில், அவர்கள் மனநிலையை அறிய முடிந்தது. போக்குவரத்து போலீசாரும் எனக்கு ஊக்கம் அளித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.