sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாலாறு, கொசஸ்தலை, ஆரணியாற்றில் இரவு நேரத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு

/

பாலாறு, கொசஸ்தலை, ஆரணியாற்றில் இரவு நேரத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு

பாலாறு, கொசஸ்தலை, ஆரணியாற்றில் இரவு நேரத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு

பாலாறு, கொசஸ்தலை, ஆரணியாற்றில் இரவு நேரத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு


ADDED : ஆக 07, 2024 12:28 AM

Google News

ADDED : ஆக 07, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பாலாறு, கொசஸ்தலை, ஆரணியாறுகளில் இரவு நேரத்தில் மணல் திருட்டு அதிகரித்துள்ளதை கனிமவளம் மற்றும் நீர்வளத்துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திரா வழியாக ஆரணியாறு, கொசஸ்தலையாறு, பாலாறு ஆகியவை தமிழகத்திற்குள் பயணிக்கின்றன. பாலாறு வாயிலாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்கள் பயன்பெறுகின்றன. ஆரணியாறு, கொசஸ்தலையாறு வாயிலாக, திருவள்ளூர் மாவட்டம் பயன்பெறுகிறது.

பாலாற்றில் தொடர்ந்து மணல் எடுக்கப்பட்டதால், மேற்பரப்பு நீர்வளம் கடுமையாக பாதித்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, மணல் அள்ளுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் மணல் வளம் குறைவாக உள்ளதால், குவாரிகள் திறப்பதற்கு நீர்வளத்துறை அனுமதி மறுத்து வந்தது. அதையும் மீறி கொசஸ்தலையாற்றில் ஒரு இடத்தில் மட்டும் குவாரியை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அமலாக்கத்துறை ரெய்டுக்கு பிறகு, பல குவாரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், கட்டுமான பணிக்கு மணல் கிடைக்காத நிலை உள்ளது.

ஆந்திராவில் இருந்து கலப்பட மணல் எடுத்து வரப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் கிடங்கு அமைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாலாறு, கொஸ்தலை, ஆரணியாறுகளில் இரவு நேரங்களில் மணல் திருட்டு அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கொசஸ்தலை ஆற்றில் காரனோடை, ஆத்துார், கன்னிகைபேர், பெரியபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் திருட்டு நடக்கிறது. இதற்காக, வாகனங்கள் செல்லும் அளவிற்கு, புதர்களை அகற்றி மணல் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

ஆரணியாற்றில் புதுவாயல், எல்லம்பேடு, சின்னகாவனம், பெரும்பேடு, பாளையம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் திருட்டு நடக்கிறது. பாலாற்றில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மணல் திருட்டு சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

இதனை நீர்வளத்துறையினர் மட்டுமின்றி கனிமவளத் துறையினரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.






      Dinamalar
      Follow us