ADDED : ஆக 29, 2024 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் அருகே சோமங்கலத்தில், பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் உடனுறை சோமநாதீஸ்வரர் கோவில் உள்ளது.
நவ கிரகங்களில் சந்திர தலமாக கருதப்படும் இக்கோவிலில், ஏராளமான பக்தர்கள் வழிபடுகின்றனர்.
ஹிந்து சமய அறநிலைய துறை நிர்வகிக்கும் இக்கோவிலில், திருப்பணி நடக்கிறது. கடந்த 26ல் கணபதி பூஜையுடன் பாலாலயம் விழா துவங்கியது.
இரண்டு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று, பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.