/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளிர் நிலையத்திற்கு இன்ஸ்., நியமனம்
/
மகளிர் நிலையத்திற்கு இன்ஸ்., நியமனம்
ADDED : செப் 11, 2024 12:37 AM
சென்னை, செப். 11-
தாம்பரம் காவல் ஆணையரகம், 2022 ஜன., மாதம் உருவாக்கப்பட்டது. இதில், பள்ளிக்கரணை காவல் மாவட்டத்தில், சேலையூர், கேளம்பாக்கம், கண்ணகிநகர் ஆகிய மூன்று மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன.
இதில், கண்ணகிநகரில் ஆறு மாதங்களாக காவல் ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது.
சமீபத்தில் துவங்கிய, கேளம்பாக்கத்திற்கு காவல் ஆய்வாளர் நியமிக்கவில்லை. இதனால், சேலையூர் மகளிர் காவல் ஆய்வாளர், 10 காவல் நிலையங்களை சேர்த்து பார்க்கிறார்.
ஓராண்டாக, ஒவ்வொரு மகளிர் காவல் நிலையங்களிலும், 3 - 5 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன. மகளிருக்கு குடும்பத்தினரால் ஏற்படும் பிரச்னைக்கு, காவல் நிலையத்தில் தீர்வு தேடுவதும் அதிகரித்துள்ளது.
சில புகார்களை, பெண் காவல் ஆய்வாளர் விசாரிக்க வேண்டும் என பெண்கள் விரும்பினர். ஆனால், காவல் ஆய்வாளர்கள் பற்றாக்குறையால், பெண்களுக்கு உடனடி தீர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் பெண் ஆய்வாளர் பற்றாக்குறை இருந்ததால், டி.ஜி.பி., அலுவலகத்தில் பணி புரிந்த வனிதா என்ற காவல் ஆய்வாளர்,கண்ணகிநகர் மகளிர் காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.