/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜயநகரம் புற்றுக்கோவில் அருகே சிக்னல் அமைக்க வலியுறுத்தல்
/
விஜயநகரம் புற்றுக்கோவில் அருகே சிக்னல் அமைக்க வலியுறுத்தல்
விஜயநகரம் புற்றுக்கோவில் அருகே சிக்னல் அமைக்க வலியுறுத்தல்
விஜயநகரம் புற்றுக்கோவில் அருகே சிக்னல் அமைக்க வலியுறுத்தல்
ADDED : மார் 03, 2025 01:05 AM
மேடவாக்கம், மேடவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்டது விஜயநகரம். இங்கு, தாம்பரம்- - வேளச்சேரி சாலையில் அமைந்துள்ள புற்றுக்கோவிலில், செவ்வாய், வெள்ளி, விசேஷ நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் கூடுவர்.
தவிர, கோவிலில் இருந்து 100 மீட்டர் நீளத்தில், மேடவாக்கம் மேம்பாலம் துவங்குகிறது. வேளச்சேரி, துரைப்பாக்கம் நோக்கி செல்வோர் இப்பாலத்தை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம் மார்க்கமாக செல்வோர், மேம்பாலத்தின் இடப்புறமாக அணுகு சாலை இல்லாததால், வலதுபுற அணுகு சாலையை தான் பயன்படுத்த வேண்டும்.
எனவே, தாம்பரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், திடீரென வலப்பக்கம் திரும்பி செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
தவிர, விஜயநகர பகுதிவாசிகள், மேடவாக்கம் நோக்கி செல்ல, கோவிலின் எதிர்ப்புறம் தான் வலப்பக்கமாக திரும்ப வேண்டும்.
அங்கு, சிக்னல் இல்லாததால், தாம்பரம்- - வேளச்சேரியில் சாலையில் வரும் வாகனங்கள் நிதானித்து வருவதில்லை.
இதனால், விஜயநகர பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள், சாலையை கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், குறிப்பிட்ட பகுதியில் சிக்னல் அமைக்கவும், இச்சாலையின் இருபுறமும் 'வேகத்தடை' அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.