தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பணி பாதுகாப்பு கோரி பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்

பணி பாதுகாப்பு கோரி பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்

பணி பாதுகாப்பு கோரி பயிற்றுநர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 19, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உயர்தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநர்கள், பாரிமுனையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆய்வக பயிற்றுநர்கள் கூறியதாவது:

‘சமக்ரா சக் ஷா’ திட்டத்தின் கீழ், தமிழகம் முழுதும் 6,000க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வக பயிற்றுநர்களாக பணியாற்றுகிறோம்.

எங்களுக்கு, 12 ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு மற்றும் 11 மாத ஒப்பந்த முறைக்கு தீர்வு காண வேண்டும். மே மாதம் பணியாற்றியும் ஊதியம் வழங்கப்படவில்லை.

பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, வாழ்வாதாரத்தை காக்க அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us