தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் கைது

பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் கைது

பெண்ணை தாக்கிய கணவர், மாமனார் கைது


UPDATED : ஜூலை 19, 2026 09:30 PM

ADDED : ஜூலை 19, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2026 09:30 PM ADDED : ஜூலை 19, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொடுங்கையூர்: எருக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி, 26 மற்றும் ராஜேஷ், 27. இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன், ராஜேஷ் விவாகரத்து 'நோட்டீஸ்' அனுப்பியதால், அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று கீதாஞ்சலி வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், ராஜேஷ் மற்றும் அவரது தந்தை குணசேகரன், 59, கீதாஞ்சலியை தாக்கினர். இது குறித்த புகாரின்படி, ராஜேஷ் மற்றும் அவரது தந்தை குணசேகரனை, கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெண்ணை மிரட்டிய ரவுடிகள் கைது

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் ராணி அண்ணா நகரைச் சேர்ந்தவர் 47 வயது பெண். கணவர் இறந்த நிலையில், அதே பகுதியில் இளைய மகளுடன் 'டிபன்' கடை நடத்தி வருகிறார். கடந்த 13ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் பரத்வாஜ், 26, மற்றும் ராஜீ, 19, ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், அவரது இளைய மகளையும் ஆபாசமாக திட்டினர். தொடர்ந்து 17ம் தேதி, பெண்ணின் மருமகன் சந்தோஷை தாக்கியதுடன், பெண்ணுக்கும், மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்படி பரத்வாஜ், ராஜீ, அரவிந்த், 30, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us