/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜாதி குறித்து அவதுாறு: தாளாளர் மீது வழக்கு
/
ஜாதி குறித்து அவதுாறு: தாளாளர் மீது வழக்கு
ADDED : மே 21, 2024 12:12 AM
சென்னை,
சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி, 40. இவர், எம்.கே.பி.நகர் உதவி ஆணையரிடம் அளித்த புகார்:
கொடுங்கையூர், மறைமலையடிகள் தெருவிலுள்ள புனித டான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த ஏப்ரலில், பள்ளியின் தாளாளர் பெஞ்சமின் சூசை அழைத்து, என்னை பணி நீக்கம் செய்வதாக கூறினார்.
காரணம் கேட்டதற்கு, என் ஜாதி பெயரைக் கூறி ஒருமையில் பேசி திட்டினார். இதுகுறித்து, தேசிய பட்டியலின ஆணையத்திலும் புகார் அளித்துள்ளேன்.
கடந்த மே 10ம் தேதி பள்ளிக்கு சென்ற போது, அனைத்து ஆசிரியர்கள் மத்தியில், தகாத வார்த்தைகளால் பேசி அவதுாறாக திட்டினார். பள்ளி தாளாளர் பெஞ்சமின் சூசை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
கொடுங்கையூர் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து, இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

