/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்காக கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரம்
/
மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்காக கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரம்
மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்காக கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரம்
மெட்ரோ ரயில் பாதை பணிகளுக்காக கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரம்
ADDED : மே 02, 2024 12:35 AM

திருமங்கலம், சென்னையில், மெட்ரோ ரயிலின் இரண்டாவது கட்டத்தில், சோழிங்கநல்லுார்- மாதவரம் வழித்தடம், ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம் உள்ளிட்ட வழித்தடங்களில் அமைய உள்ளன. இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இந்த தடத்தில் கொளத்துார் - வில்லிவாக்கம், நாதமுனி சிக்னல் அடுத்து, திருமங்கலம் சிக்னல் அருகில், ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, திருமங்கலம் சிக்னல் அருகில், கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள பழைய கட்டடங்களை இடிக்கும் பணிகள் துவங்கி உள்ளன.
அதேபோல் 100 அடி சாலையில், பணிகள் நடந்து வருவதால், திருமங்கலம் முதல் பாடி மேம்பாலம் வரை 'யு -- டர்ன்' எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 3 கி.மீ., துாரத்திற்கு சுற்றும் நிலை நிலவுகிறது.
மெட்ரோ பணியை விரைந்து முடித்து, 100 அடி சாலையில் 'யு - டர்ன்' வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.