/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்வதேச மாஸ்டர் செஸ் ரஷ்ய வீரர் டேவிட் சாம்பியன்
/
சர்வதேச மாஸ்டர் செஸ் ரஷ்ய வீரர் டேவிட் சாம்பியன்
ADDED : ஆக 21, 2024 12:42 AM

சென்னை, இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக, ஐ.எம்., நார்ம் க்ளோஸ்ட்டு சர்க்யூட் செஸ் நான்காம் கட்ட போட்டி, போரூரில் நடந்து வந்தது.
நான்கு தமிழக வீரர்கள் உட்பட 10 வெளிநாட்டு வீரர்கள், ரவுண்ட் ராபின் முறையில் மோதினர்.
இறுதி சுற்றான நேற்றைய ஒன்பதாவது சுற்றில், ரஷ்யாவின் அலெக்சாண்டர் மற்றும் ரஷ்யாவின் டேவிட் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால், டேவிட் 7 புள்ளிகளில் முன்னிலை வகித்தார். தமிழகத்தின் குணால், சுரேந்திரனை வென்று, ஏழு புள்ளிகள் பெற்று முன்னிலை வகித்தார்.
அனைத்து போட்டிகள் முடிவில், டேவிட் மற்றும் குணால் இருவரும் தலா ஏழு புள்ளிகளில் முன்னிலையில் இருந்தனர்.
டைபிரேக்கர்களின் முடிவில், ரஷ்யாவின் டேவிட் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

