/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழக்கறிஞரை தாக்கியதாக இன்ஸ்.,சிடம் விசாரணை
/
வழக்கறிஞரை தாக்கியதாக இன்ஸ்.,சிடம் விசாரணை
ADDED : ஆக 17, 2024 12:04 AM
திரு.வி.க நகர், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 42. வழக்கறிஞர். இவர், நேற்று காலை, அயனாவரம், பனந்தோப்பு ரயில்வே காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் பப்பாளி வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம், சாதாரண உடையில் இருந்த ரயில்வே இன்ஸ்பெக்டர் திலிப் குமார் சிங் என்பவர், கடையை அகற்றுமாறு கூறினார்.
வாழ்வாதாரம் பாதிக்கும் என அப்பெண் கெஞ்சினார். இதைப்பார்த்த ராஜேஷ், அப்பெண்ணுக்கு ஆதரவாக பேசினார்.
இதில், வழக்கறிஞர் ராஜேசுக்கும், ரயில்வே இன்ஸ்பெக்டர் திலிப்குமார் சிங்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், திலிப்குமார் சிங் எட்டி உதைத்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேஷ், காயமடைந்த நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ராஜேஷ் அளித்த புகாரின் படி, திலிப்குமார் சிங்கிடம் ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

