/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதிர்வு தொகை விண்ணப்பிக்க அழைப்பு
/
முதிர்வு தொகை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 12, 2024 12:22 AM
சென்னை, சமூக நலத்துறையில், முதல்வரின், 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் குழந்தைகளின் பெயரில், அரசின் சார்பில், குறிப்பிட்ட தொகை வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும்.
குழந்தைகளுக்கு, 18 வயது நிறைவடையும் போது, பயனாளிகளுக்கு அந்த நிதி, வட்டியுடன் முதிர்வுத் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பதிவு செய்து, 18 வயது நிரம்பி முதிர்வுத் தொகை கிடைக்காத பயனாளிகளிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள பயனாளிகள் வைப்பு நிதி பத்திரம், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களுடன், சமூக நலன் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்து உள்ளார்.