ADDED : பிப் 27, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐ - போன் பறித்தவர் கைது
சென்னை, பட்டாபிராமை சேர்ந்த ஐ.டி., ஊழியர் சாய்ராம், 24. கடந்த, 18ம் தேதி, மாருதி காரில், கோடம்பாக்கம் சாலை வழியாக சென்றபோது, அவ்வழியே சென்ற இன்னோவா காரை, லேசாக உரசியதாக கூறப்படுகிறது. இதனால், விழுப்புரத்தை சேர்ந்த இன்னோவா கார் ஓட்டுநர் லாரன்ஸ், 24, சாய்ராமிடம் தகராறு செய்து, ஐ - போனை பறித்து சென்றார். தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, லாரன்சை கைது செய்தனர்.

