/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வடிகாலில் கழிவுநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை பாயுமா?
/
வடிகாலில் கழிவுநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை பாயுமா?
வடிகாலில் கழிவுநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை பாயுமா?
வடிகாலில் கழிவுநீர் இணைப்பு துண்டிக்க நடவடிக்கை பாயுமா?
ADDED : ஜூலை 01, 2024 01:12 AM
சென்னை:சிந்தாதிரிப்பேட்டையில், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்ட, சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், அருணாச்சலம் சாலை உள்ளது. இச்சாலையில் நுாற்றுக்கணக்கான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவர்களில் சிலர், சட்டவிரோதமாக வடிகாலில் கழிவுநீர் இணைப்புகளை கொடுத்துள்ளனர். இதனால் அவ்வப்போது, மழைநீர் வடிகாலில் இருந்து கழிவு நீர் வெளியேறி, சாலையில் பாய்கிறது.
அவ்வாறு கழிவுநீர் வெளியேறும் போது,'சூப்பர் சக்கர்' இயந்திரம் வாயிலாக, வடிகாலில் இருந்து மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.
எனவே, சாலையில் கழிவுநீர் வெளியேறும் பிரச்னையை தீர்க்க, அப்பகுதியில் வடிகாலில் சட்டவிரோதமாக இணைத்துள்ள கழிவுநீர் இணைப்புகளை அகற்ற வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது:
சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில், புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வடிகாலில், சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்க முடியாதபடி வடிகால் அமைக்க, மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால், சிறுமழைக்கே, மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.