/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இஸ்கான் ரத யாத்திரை: திருநின்றவூரில் கோலாகலம்
/
இஸ்கான் ரத யாத்திரை: திருநின்றவூரில் கோலாகலம்
ADDED : மே 02, 2024 12:47 AM

திருநின்றவூர்,
'இஸ்கான்' எனும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் அமைப்பு, தற்போது 192 நாடுகளில் 600க்கும் மேற்பட்ட கோவில்களை உருவாக்கி, உலகெங்கும் பக்திகரமாக இயங்கி வருகிறது.
வடசென்னையில் இயங்கி வரும் இந்த அமைப்பு, 3ம் ஆண்டு கவுர நிதாய் ரத யாத்திரை விழாவை, நேற்று மாலை திருநின்றவூரில் கொண்டாடியது. 'அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்' என்பதை வலியுறுத்தும் விதமாக 'சர்வே பவந்து சுகினா' எனும் முழக்கத்துடன், ரத யாத்திரை மாலை 4:00 மணிக்கு துவக்கியது.
இந்த ரத யாத்திரையில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருநின்றவூர் பேரூராட்சி தலைவர் உஷாராணி, 25 அடி உயரமுள்ள ரதத்தை இழுத்து, விழாவை துவக்கி வைத்தார். பக்கதர்கள் கீர்த்தனை பாடியும், நடனம் ஆடியும் ஊர்வலத்தை ஆனந்தமயமாக மாற்றினர்.
முதலில் சி.டி.எச்., சாலையில் இருந்து புறப்பட்ட ரதம், பின் திருநின்றவூர் மேம்பாலம், பெரியபாளையம் சாலை, கோமதிபுரம் பிரதான சாலை மற்றும் குறுக்குத் தெரு வழியாக சென்று, மாலை 6:30 மணிக்கு திருநின்றவூர் 'இஸ்கான்' அமைவிடம் சென்றடைந்தது. வழிநெடுகே பக்தர்களுக்கு ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

