/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேர்தல் பணியில் ஜெயகுமார் 'சைலன்ட்'
/
தேர்தல் பணியில் ஜெயகுமார் 'சைலன்ட்'
ADDED : மார் 31, 2024 01:34 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், 2019ல் தி.மு.க., கூட்டணியில் காங்., சார்பில் ஜெயகுமார் போட்டியிட்டு, எம்.பி., ஆனார். இம்முறையும் சீட் கேட்டு, டில்லியில் முகாமிட்டு வந்தார்.
ஆனால், காங்., மேலிடம், கர்நாடகாவில் சிறப்பாக தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வைத்த, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்திலை அறிவித்தது.
இதையடுத்து சசிகாந்த் செந்தில், திருவள்ளூரில் கடந்த, 27ல் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் மட்டுமே, அவருடன் வந்தனர். சசிகாந்த், தொகுதி முழுதும் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து தற்போது வரை, காங்., - எம்.பி., ஜெயகுமார், தேர்தல் பணியில் ஈடுபடாமலும், பிரசாரத்தில் பங்கேற்காமலும், புறக்கணித்து வருகிறார். திருவள்ளூர் காங்.,கின் அனைத்து 'வாட்ஸாப்' குழுவில் இருந்தும், படிப்படியாக வெளியேறி வருகிறார்.

