/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஜெயலலிதா பிறந்த நாள் விழா மணிமங்கலத்தில் நலத்திட்ட உதவி
/
ஜெயலலிதா பிறந்த நாள் விழா மணிமங்கலத்தில் நலத்திட்ட உதவி
ஜெயலலிதா பிறந்த நாள் விழா மணிமங்கலத்தில் நலத்திட்ட உதவி
ஜெயலலிதா பிறந்த நாள் விழா மணிமங்கலத்தில் நலத்திட்ட உதவி
ADDED : பிப் 25, 2025 01:13 AM

குன்றத்துார், குன்றத்துார் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா, நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், சிறப்பு அழைப்பாளராக குன்றத்துார் ஒன்றிய செயலரும், ஸ்ரீபெரும்புதுார் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான மதனந்தபுரம் கே.பழனி பங்கேற்று, ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தார்.
இதை தொடர்ந்து, 300 பேருக்கு இலவச வேட்டி - சேலை வழங்கினார். இதில், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் வேணுகோபால், குன்றத்துார் ஒன்றிய விவசாய பிரிவு செயலர் எச்.டி.சிவராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல், குன்றத்துார் நகராட்சி மற்றும் மலையம்பாக்கம் ஊராட்சியில் நடந்த விழாவிலும், கொடியேற்றி அன்னதானம் வழங்கினார்.