நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமைந்தரை, அமைந்தகரை, வி.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரேமலதா, 50; உயர் நீதிமன்ற ஊழியர். இவர், நேற்று அமைந்தகரை போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், 'இரு தினங்களுக்கு முன், தன் வீட்டின் பீரோவில் வைத்திருந்த நகைகளை சோதித்தேன். அப்போது, 2 சவரன் நகைகள், 20,000 ரூபாய் மாயமாகி இருந்தது. பணிப்பெண் மீது சந்தேகம் உள்ளது' என, புகாரில் குறிப்பிட்டிருந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.