/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அதிவேகமாக கார் ஓட்டிய ஆசாமியை மடக்கிய நீதிபதி
/
அதிவேகமாக கார் ஓட்டிய ஆசாமியை மடக்கிய நீதிபதி
ADDED : மார் 08, 2025 12:22 AM
குன்றத்துார்,
அதிவேகமாக கார் ஓட்டிய போதை ஆசாமி யை மடக்கி பிடித்த நீதிபதி உத்தரவையடுத்து அவருக்கு போலீசா ரால் அபராதம் விதிக்கப் பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வினோ, 'மாருதி ஸ்விப்ட்' காரில், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார்.
சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று, இவர்களது காரில் மோதுவது போல் வந்து முந்தி சென்றுள்ளது.
அந்த காரை சுங்கச்சாவடியில் நீதிபதி மடக்கி விசாரித்தபோது, கார் ஓட்டுநர் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரசாந்த், 28, மதுபோதையில் கார் ஓட்டியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், போதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக, பிரசாந்திற்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.