/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதை மின்வட பணிக்கு எதிர்ப்பு ஜோதி நகர்வாசிகள் போராட்டம்
/
புதை மின்வட பணிக்கு எதிர்ப்பு ஜோதி நகர்வாசிகள் போராட்டம்
புதை மின்வட பணிக்கு எதிர்ப்பு ஜோதி நகர்வாசிகள் போராட்டம்
புதை மின்வட பணிக்கு எதிர்ப்பு ஜோதி நகர்வாசிகள் போராட்டம்
ADDED : செப் 11, 2024 12:05 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சி, 33வது வார்டில் அண்ணனுார் ஜோதி நகர் உள்ளது. ஒரு பகுதியில் கோதாவரி தெரு, கங்கா தெரு, வைகை தெரு, சாமந்தி தெரு, தாமரை தெரு மற்றும் சுதந்திரா தெரு உள்ளன.
இங்கு, ஆவடி மாநகராட்சியால், குடிநீர், மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
அதேநேரம், 10 ஆண்டுகளுக்கு முன், ஜோதி நகர் பிரதான சாலையின் வலது புறத்தில், மின்சார வாரியம் 230 கி.வா., திறன் கொண்ட புதைவட கேபிள் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கூறிய சாலையின் இடது புறத்தில் 440 கி.வா., திறன் கொண்ட புதை மின் வடம் அமைக்கும் பணிக்காக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் மின் வாரிய அதிகாரிகள், சாலையை அளவீடு செய்ததாக கூறப்படுகிறது.
பருவமழைக்காலம் நெருங்குவதால், இந்நேரம் மின் வடம் புதைக்கும் பணி நடந்தால், 24 அடி சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகும்.
எனவே, கேபிள் புதைக்கும் பணியை மாற்று வழியில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆவடி எம்.எல்.ஏ., நாசர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கடந்த மே மாதம் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், நேற்று மதியம் ஜோதி நகர் முதல் பிரதான சாலையில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாற்று வழியில் பணியை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமுல்லைவாயில் போலீசார், பகுதிவாசிகளிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, கலைந்து சென்றனர்.