sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தும் பணி துவக்கம்

/

காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தும் பணி துவக்கம்

காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தும் பணி துவக்கம்

காசிமேடு மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தும் பணி துவக்கம்


ADDED : ஜூலை 10, 2024 12:06 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், 23 கிராமங்களைச் சேர்ந்த லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கிருந்து 1,000 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடித் தொழில் நடக்கிறது.

இதன் வாயிலாக, தினமும் 1,000 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்; துபாய், சிங்கப்பூர், ஜப்பான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 8௦௦ படகு கட்டுவதற்கான வார்ப்பு தளம் உள்ளது. ஆனால், இங்கு 2,௦௦௦க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளதால் இடநெருக்கடியில், படகுகள் கட்டப்படுகின்றன.

இதனால், புயல், கன மழையின் போது, படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன; கடலில் மூழ்கிவிடுகின்றன.

இந்த நிலையில், அரசுக்கு பொருளாதார வருவாய் ஈட்டித் தரும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம், மத்திய - மாநில அரசுகளின் 150 கோடி ரூபாய் நிதியுதவியுடன் நவீனப்படுத்த திட்டமிடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, நாகூரார் தோட்டம் கடற்கரை பகுதியில், 400 படகுகள் நிறுத்தும் அளவில் பிரதான வார்ப்பு தளம் மற்றும் படகு அணையும் தளம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, நவீன 'மிதவை டிரஜ்ஜிங் கப்பல்' வாயிலாக, மணல் மற்றும் கழிவுகளை தோண்டி எடுத்து, கடல் ஆழப்படுத்தும் பணி நடக்கிறது.






      Dinamalar
      Follow us