/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டெம்போ டிராவலர்' வாகனத்தை திருடிய கேரளா வாலிபர் கைது
/
'டெம்போ டிராவலர்' வாகனத்தை திருடிய கேரளா வாலிபர் கைது
'டெம்போ டிராவலர்' வாகனத்தை திருடிய கேரளா வாலிபர் கைது
'டெம்போ டிராவலர்' வாகனத்தை திருடிய கேரளா வாலிபர் கைது
ADDED : ஆக 25, 2024 12:09 AM
அண்ணா நகர், கொரட்டூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் 42; ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் காலை, தனது 'டெம்போ டிராவலர்' வாகனத்தை, அண்ணா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் வெளியிலேயே நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
வெளியே வந்து பார்த்தபோது வாகனம் காணவில்லை. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், மர்மநபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றது பதிவாகியிருந்தது.
நேற்று இரவு மர்மநபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கேரளா மாநிலத்தை சேர்ந்த அப்துல் ஜலில், 28 என்பதும், திருடிய வாகனத்தை மீனாம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருப்பதையும் ஒப்புகொண்டார்.
இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அப்துல் ஜலிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.