/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கீழ்ப்பாக்கம் ஜி.ஹெச்.,சில் தீ விபத்து
/
கீழ்ப்பாக்கம் ஜி.ஹெச்.,சில் தீ விபத்து
ADDED : ஆக 18, 2024 12:26 AM

கீழ்ப்பாக்கம், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில், புறநோயாளிகள் உள்நோயாளிகள் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதன், ஆறு தளம் கொண்ட முகப்பு பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில், நேற்று மதியம் 2:10 மணிக்கு திடீரென கரும்புகை சூழ்ந்தது. அனைத்து அறைகளிலும் பரவியதால், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அவதியடைந்தனர்.
கீழ்ப்பாக்கம், வேப்பேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து, கண்ணாடிகளை உடைத்து கரும்புகையை வெளியேற்றினர். இதையடுத்து, பூட்டப்படிருந்த அறையில் இருந்து புகை வெளிவருவது தெரியவந்தது. மருத்துவ உபகரணங்கள் இருந்த அந்த அறையின் கண்ணாடியை உடைத்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த அறையில் இருந்த 'ஏசி'யில் மின்கசிவு ஏற்பட்டு, அது தீக்கிரையானது தெரியவந்தது. கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

