/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோகைன் விற்ற கீழ்ப்பாக்கம் வாலிபர் கைது
/
கோகைன் விற்ற கீழ்ப்பாக்கம் வாலிபர் கைது
ADDED : மே 23, 2024 12:37 AM
திருமங்கலம், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில், உயர் ரக போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடமான அண்ணா நகர் ஏழாவது அவென்யூவில், திருமங்கலம் போலீசார் கண்காணித்தனர்.
அப்போது அங்கு, வாலிபர் ஒருவர் பொட்டலங்களில் போதைப் பொருள் விற்றது தெரிந்தது. அவரை மடக்கிப் பிடித்து சோதித்த போது, அவரிடம் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 12 கிராம் உயர் ரக போதைப் பொருளான கோகைன் இருந்தது.
விசாரணையில் அவர் கீழ்ப்பாக்கம், கெல்லீஸ் பகுதியைச் சேர்ந்த இப்ரான் உசானா, 30, என தெரிந்தது.
பின், அவரது வீட்டில் சோதித்து, போதைப் பொருள் விற்ற 4.5 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
இப்ரான் உசானா, 'பி ஆர்ச்' எனும் இளங்கலை கட்டடக்கலை படித்துவிட்டு, இரண்டு ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
பின், சொந்தமாக நிறுவனம் துவங்கி நடத்தி வந்துள்ளார். கூடுதல் வருமானத்திற்காக, கோகைன் வாங்கி விற்று வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது.
இவருக்கு கோகைன் 'சப்ளை' செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.

