/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொற்று நோய் பிறப்பிடமாகிறது கீழ்ப்பாக்கம் காவல் நிலையம்
/
தொற்று நோய் பிறப்பிடமாகிறது கீழ்ப்பாக்கம் காவல் நிலையம்
தொற்று நோய் பிறப்பிடமாகிறது கீழ்ப்பாக்கம் காவல் நிலையம்
தொற்று நோய் பிறப்பிடமாகிறது கீழ்ப்பாக்கம் காவல் நிலையம்
ADDED : பிப் 28, 2025 12:31 AM

கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, கீழ்ப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு, குற்றத்தடுப்பு, அனைத்து மகளிர் போலீஸ், போக்குவரத்து உள்ளிட்ட துறை அலுவலகங்கள் இயங்குகின்றன.
அத்துடன் கட்டடத்திலேயே, காவல் சரகத்தின் உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் அலுவலகங்களும் செயல்படுகின்றன.
இதனால், தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், காவல் நிலையத்தில் துாய்மை பணி சரிவர மேற்கொள்ளப்படாததால், சுற்றுப்புறம் முழுதும் குப்பை கழிவாக காட்சியளிக்கிறது.
அதேபோல, முகப்பு பகுதியில் நிறுத்தியுள்ள பழைய பறிமுதல் வாகனங்களில், பல நாட்களாக தேங்கி இருப்பது போல், பாசியுடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.
இதனால், தொற்று நோயின் பிறப்பிடமாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையம் மாறி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

