/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.66 லட்சம் மோசடி கோவூர் நபர் சிக்கினார்
/
ரூ.66 லட்சம் மோசடி கோவூர் நபர் சிக்கினார்
ADDED : மே 10, 2024 12:37 AM

ஆவடி, மதுரை மாவட்டம், மேலுார் தாலுகா, தந்தை பெரியார் தெருவைச் சேர்ந்தவர் சபரி மணிகண்டன், 32. இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது:
கடந்த 2019ல், நாளிதழில் வெளியான, 'நெல்லை புட் புராடக்ட்' என்ற நிறுவனத்தார், மாவட்ட வாரியாக சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் தேவை என விளம்பரம் செய்திருந்தனர்.
அதைப் பார்த்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாறன் மற்றும் அவரது மகன் அபிஷேக் மாறன் இருவரையும் தொடர்பு கொண்டு பேசினேன்.
தொடர்ந்து நெல்லைக்கு நேரில் சென்று பார்த்த போது, 'தங்கள் நிறுவனத்தின் பொருட்களை காண்பித்து நல்ல லாபம் வரும்' எனக் கூறினர். மேலும், நீங்கள் சூப்பர் ஸ்டாக்கிஸ்டாக தேர்வாகி இருப்பதாகக் கூறி, 1.50 லட்சத்தை பெற்றனர். பொருள் மற்றும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றினர்.
அவர்கள் குறித்து விசாரித்தபோது, என்னை போல் ஐந்து பேரிடம் 65.82 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியது தெரிந்தது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து விசாரித்த மோசடி தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி, தலைமறைவாக இருந்த சென்னை, கோவூர், சிக்க ராயபுரத்தைச் சேர்ந்த மாறன், 49, என்பவரை கைது, செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.