/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு சந்தை சிறு மழைக்கே நாசம்
/
கோயம்பேடு சந்தை சிறு மழைக்கே நாசம்
ADDED : மே 09, 2024 12:19 AM

கோயம்பேடு, சிறு மழைக்கே கோயம்பேடு சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறியதால், வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு, தமிழகம் மட்டுமல்லாது, நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் காய், கனி, மலர் வரத்து உள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து பழங்களும் வருகின்றன.
தினமும், ஆயிரக்கணக்கான நுகர்வோர் பொருட்களை வாங்கிச் செல்ல, இங்கு வருகின்றனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த கோயம்பேடு சந்தையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, வியாபாரிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த சிறிய மழைக்கு, சந்தை வளாகம் சேறும் சகதியுமாக மாறி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இதனால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.