/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
/
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 15, 2024 12:33 AM
சென்னை, பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக, அங்கு காணப்படும் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகிறது.
இத்தலம் காளஹஸ்தி என்ற பெயரும் பெற்றுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இக்கோவில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
திருப்பணிகள் முடிந்த நிலையில், இன்று மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. மகா கணபதி பூஜை, ஆறாம் கால பூஜை, ஹோமம் இன்று காலை 7:30 மணி முதல் நடக்கின்றன. கடம் புறப்பாடு, ராஜா கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
தொடர்ந்து, சுவாமி, அம்பாள் சன்னிதிகள், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்ப்படுகிறது.