/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குருவாயூரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
குருவாயூரப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூலை 13, 2024 12:17 AM

நங்கநல்லுார், நங்கநல்லுார், ராம் நகரில் உள்ளது உத்தர குருவாயூரப்பன் கோவில். இக்கோவில் கட்டுமானம், கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலைப் போல அமைந்திருந்தாலும், மரத்தால் கட்டப்படாமல், கான்கிரீட் வாயிலாக கட்டப்பட்டது. குருவாயூரப்பன் ஆஸ்தீக சமாஜம் என்ற அறக்கட்டளை, கோவிலை நிர்வகித்து வருகிறது.
இக்கோவில் 5 அடி உயரத்திற்கு ஜாக்கி வைத்து உயர்த்தப்பட்டு, புதுப்பொலிவு பெற்றுள்ளது. திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் 7ம் தேதி முதல், யாகசாலை வளர்க்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, கணபதி உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.
கும்பாபிஷேக தினமான நேற்று காலை 5:00 மணி முதல் ஆறாம் கால பூஜைகள் துவங்கின. காலை 9:10 மணிக்கு பரிவார மூர்த்திகள் மற்றும் உத்தர குருவாயூரப்பன் சன்னிதி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

