/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலத்தில் இருந்து குதித்து வக்கீல் உயிரிழப்பு
/
மேம்பாலத்தில் இருந்து குதித்து வக்கீல் உயிரிழப்பு
ADDED : மார் 04, 2025 08:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, கருங்குழி பஜார் தெருவைச் சேர்ந்தவர் மனிஷ்குமார் ஜெயின், 41; வழக்கறிஞர். இவர் கொண்டித்தோப்பில் வசித்து வந்தார்.
இவர், நேற்று பேசின்பாலம் வழியாக வந்து வியாசர்பாடி மேம்பாலத்தின் மைய பகுதியில், பைக்கை நிறுத்தி மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் கை, கால் எலும்புகள் உடைந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.