/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சினிமா எழுத்தாளர்கள் மூவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
/
சினிமா எழுத்தாளர்கள் மூவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சினிமா எழுத்தாளர்கள் மூவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சினிமா எழுத்தாளர்கள் மூவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ADDED : ஆக 11, 2024 06:14 AM

சென்னை: 'திரிசக்தி குழுமம்' சார்பில் மூத்த திரைப்பட எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் அறக்கட்டளையின், 15ம் ஆண்டு துவக்க விழா, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று நடந்தது.
இதில், 'திரிசக்தி குழுமம்' சார்பில் கவிஞர் பூவை செங்குட்டுவன், இயக்குனர்கள் காரைக்குடி நாராயணன், வி.என்.சம்பந்தம் ஆகியோருக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதும். தலா 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது.
இயக்குனர் மதுமிதா சார்பில், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த ஏழு மாணவ - மாணவியருக்கு, தலா 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.
விழாவில் அறக்கட்டளை தலைவரும், திரிசக்தி குழுமத்தின் தலைவருமான திரிசக்தி சுந்தரராமன் பேசியதாவது:
மிகப்பெரிய வெற்றி பெற்ற சினிமா படங்களுக்கு கதை, பாடல்களை எழுதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் வயதான காலத்தில் வறுமையில் வாடுகின்றனர்.
அவர்களுக்கு உதவி செய்வதற்காக, மறைந்த இயக்குனர் விசு, கவிஞர் பிறைசூடன் ஆகியோர் முயற்சியில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் அறக்கட்டளை துவக்கப்பட்டது.
கடந்த, 2009ல் இந்த அறக்கட்டளைக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினேன். தற்போது அறக்கட்டளை யில், 37 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை உள்ளது.
அதிலிருந்து கிடைக்கும் வட்டியிலிருந்து, மூத்த எழுத்தாளர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது, அவர்களின் மருத்துவ செலவுகளுக்கு உதவுகிறது.
மூத்த கலைஞர்களுக்கு மரியாதையும், உதவியும் செய்யும் வகையில், இனி ஆண்டுதோறும் மூத்த தமிழ் எழுத்தாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ராதாரவி, இயக்குனர்கள் வி.சி.குகநாதன், மதுமிதா, பத்திரிகையாளர் ராம்ஜி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் அறக்கட்டளை உறுப்பினர்கள் சோலை ராஜேந்திரன், சீனிவாச ராவ், மயிலை குமார், தீனதயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.