/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமானத்தில் திடீர் கோளாறு லண்டன் பயணியர் அவதி
/
விமானத்தில் திடீர் கோளாறு லண்டன் பயணியர் அவதி
ADDED : ஆக 09, 2024 12:16 AM
சென்னை, லண்டனில் இருந்து தினம் நள்ளிரவு புறப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், அதிகாலை 3:30 மணிக்கு, சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேரும். இங்கிருந்து, அதிகாலை 5:35 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 235 பயணியருடன் லண்டனில் புறப்பட்ட விமானம், சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. புறப்பட்ட சிறிது நேரத்தில், அந்த விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம், லண்டனுக்கே மீண்டும் திருப்பப்பட்டு, அதிகாலையில் தரையிறக்கப்பட்டது.
கோளாறை சரி செய்ய முடியாததால், விமான சேவை ரத்து செய்யப்படுவதாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்தது.
இதனால், சென்னையில் இருந்து லண்டன் செல்ல காத்திருந்த 200க்கும் மேற்பட்ட பயணியர், பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
சிலர், துபாய், அபுதாபி வழியாக லண்டனுக்கு புறப்பட்டனர். மற்றவர்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.