/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் தாழ்தள பஸ்கள்
/
6 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் தாழ்தள பஸ்கள்
6 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் தாழ்தள பஸ்கள்
6 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் மீண்டும் தாழ்தள பஸ்கள்
ADDED : ஜூன் 30, 2024 12:36 AM

சென்னை, இரண்டு புதிய தாழ்தள பேருந்துகள், ராஜஸ்தானில் இருந்து சென்னை குரோம்பேட்டை பணிமனைக்கு எடுத்து வரப்பட்டு உள்ளன. இவை, விரைவில் சென்னையில் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் 'ஏசி' தாழ்தள பேருந்துகள், கடந்த 2018ம் ஆண்டு வரை இயக்கப்பட்டன. அதன் பின் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவை இயக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக இரண்டு புதிய பேருந்துகள் ராஜஸ்தானில் இருந்து வந்துள்ளன.
இந்த பேருந்தில் மாற்றுத்திறனாளிகள் எளிமையாக ஏறி, இறங்க முடியும். இருக்கையிலும், அமர்ந்து செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய பேருந்தில், போக்குவரத்து தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வேகத்தடை இல்லாத பிரதான சாலைகளில் மட்டுமே இப்பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.