ADDED : ஜூலை 17, 2026 04:11 PM
அண்ணாசாலை, ஜூலை 18–
அமீர் மஹால் காவலாளியை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
ராயப்பேட்டை, பாரதி சாலையில் உள்ள அமீர் மஹாலில் காவலாளியாக வேலை பார்த்து வருபவர் முகமது நஜ்ரூல் இஸ்லாம், 40. கடந்த, 15ம் தேதி அன்று மதியம் பணியிலிருந்தபோது, மஹாலில் வசித்து வரும் ஜாகிர் பாஷா மதுபோதையில் நண்பர் ஒருவரை அழைத்து வந்தார்.
அப்போது நண்பரை அனுமதிக்க முடியாது என காவலாளி திட்டவட்டமாக தெரிவித்தார். இதையடுத்து இருவரும் வெளியே சென்றுவிட்டனர்.
மாலை மீண்டும் வந்த ஜாகிர் பாஷா காவலாளியிடம் வீண் தகராறு செய்து தாக்கியதுடன், கீழே கிடந்த கல்லை எடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
காயமடைந்த காவலாளி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாசாலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஜாகிர் பாஷா, 41 என்பவரை கைது செய்தனர்.
