ADDED : ஜூலை 17, 2026 03:43 PM
அ நிறம் | அளவு
பூக்கடை: பூங்கா நகர், என்.எஸ்.சி., போஸ் சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக ஊழியர் தீபமாலா, 45.
கடந்த 3ம் தேதி காலை அலுவலகத்தின் முன், நிறுத்தியிருந்த அவரது ‘ஹோண்டா ஆக்டிவாʼ ஸ்கூட்டர் திருடு போனது. இது குறித்து விசாரித்த பூக்கடை போலீசார், திருட்டில் ஈடுபட்ட தண்டையார்பேட்டை, வீரா குட்டி தெருவைச் சேர்ந்த விக்ரம், 38, என்பவரை, நேற்று முன்தினம் கைது செய்து ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.
